
விடுமுறையை கழிக்க விடை தேடிகொண்டிருந்த என்னை
விருட்டென்று வரவேற்றது கடற்கரை!
தனியாக நடக்கத்தான் ஆசை, ஆனாலும்
திரண்டு வந்திருந்தது சென்னை மாநகரம்!
உப்புக்காற்று உள்ளே சென்றதும்
குபீரென்று வெளி வந்தன
குதவலையை நேரிதுக்கொண்டிருந்தவை!
"Salt Therapy" போலும்!!!
துரத்தும் தடுமாற்றங்கள் ..
தூரத்திலிருந்து நகையாடும் நான் கண்ட கனவுகள்..
தொலைந்த நண்பன்..
தொலையா பகைமைகள் ..
உறக்கம் மறந்த இரவுகள்..
உற்சாகம் மறந்த பகல்கள்..
காதில் கேட்கும் கதறல்கள்
கன நேரமும் கனைதுக்கொண்டிருக்கும் கைப்பேசிகள்..
சொல்ல மறந்த துன்பங்கள் ..
சொல்லாமல் மறைத்த இன்பங்கள் ..
அடுக்குமொழியில் அழுதுகொண்டிருந்தன ஆர்பரிக்கும் எண்ணங்கள்
ஒன்று கூடி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன ஒவ்வா ஓலங்கள்
கழுவினேன்- கால்களோடு என் கவலைகளையும்!
பல்லாயிரக்கணக்கான மக்களில் என்னை மட்டும் பார்த்துவிட்டார் பொலும்
பன்மையாக என் பக்கத்திலே வந்து பக்குவபடுத்தியது கடலலை
"நில் , இறக்கி வை , திரும்பி செல் !" என்று தண்ணீர் தெளித்தது!
செவிமடுத்தேன்!
பொட்டலம் கட்டி படகில் ஏற்றிவிட்டேன் என் பழுவை
ஆனால் என் படகின் முன்னே மிதந்துகொண்டிருந்தனவோ சில பல கப்பல்கள்!
எடை குறைந்தாற்போல் மனதில் சோர்வின்றி
எதுகை மோனை பற்றிய கவலையும் இன்றி
விடை பெற்றுக்கொண்டேன் - வெகுளியாக!!
பி.கு
நான் கவியன் இல்லை..
கடற்கரையில் என் கவலைகளுக்கு கருப்பு பூக்கள் சமர்ப்பித்து காரியம் செய்ய வந்தவள்!!
Hi,
ReplyDeleteThis is srini. very nice poem. i like the following lines from you poem.
"பல்லாயிரக்கணக்கான மக்களில் என்னை மட்டும் பார்த்துவிட்டார் பொலும்
பன்மையாக என் பக்கத்திலே வந்து பக்குவபடுத்தியது கடலலை
"நில் , இறக்கி வை , திரும்பி செல் !" என்று தண்ணீர் தெளித்தது"
Have you released any books ?
Regards,
Srinivasan M
Nice one Sowmya..தமிழ் புலமை நல்லா இருக்கு.. தொடர்ந்து எழுதவும் :)..
ReplyDeleteThanks Bharath!
ReplyDelete